ezhuna club

எழுநா மன்ற உறுப்புரிமை, ஆண்டுச் சந்தா 100 அமெரிக்க டொலர்கள் எனத் தீர்மானிக்கப்பட்டு 2012 இல் உருவாக்கப்பட்டது. இதன் மூலம், மன்றத்தில் அங்கத்துவராகும், உறுப்பினர் ஒருவர், ஓர் ஆண்டு முழுவதிலும் வெளியாகும் எழுநாவின் அனைத்து வெளியீடுகளையும் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடியும்.

எழுநாவின் தற்போதைய பருமட்டான குறிக்கோளாக ஓர் ஆண்டில், 12 புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளது. ( எதிர்காலத்தில் வெளியீடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, அச்சுச்செலவு அதிகரிப்பு மற்றும் அனுப்பு கூலிச் செலவு போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து மன்ற உறுப்புரிமை தொகை சில மாற்றங்களுக்கு உட்படலாம்.)

கூட்டுறவு முறைமையிலான இவ் வெளியீட்டு முயற்சிக்கும், இதனுாடாக இம் முயற்சிகளின் பங்காளர்கள் ஆவதற்கும் ஆர்வலர்களிடமிருந்து எழுநா ஆதரவு கோருகின்றது.

சந்தா

கனடா 100 கனேடிய டொலர்கள்
சுவிற்சர்லாந்து 90 சுவிஸ் பிராங்குகள்
அவுஸ்ரேலியா 100 அவுஸ்ரேலிய டொலர்கள்
ஐரோப்பா 75 யூரோக்கள்
ஐக்கிய இராச்சியம் 60 ஸ்ரேலிங் பவுண்டுகள்

குறிப்புக்கள்

புத்தகக் கழக அங்கத்துவம், அமைப்புக்களுக்கானது அல்ல.
எழுநாவின் ஒவ்வொரு வெளியீடுகளும், உறுப்பினர்களுக்கு உடனடியாக சேர்ப்பிக்கப்படும். அவற்றுக்கான அனுப்புச் செலவு இலவசமானது.

எழுநா மன்றத்தில் இணைய விரும்புவோர் info@ezhunamedia.org எனும் மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது கீழ்க்காணும் படிவத்தினூடாகவோ தொடர்பு கொள்ளவும்.